குழப்பம் leads to புலம்பல்

இது வரை என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே நான் மட்டும் சம்பந்தப் பட்டவை. இன்னும் சில மாதங்களில் நான் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும். என் திருமணம் பற்றிய முடிவு அது. பல்வேறு காரணங்களுக்காக நான் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதே எனக்கு சரிப்படும் என்று நினைக்கிறேன். அவற்றுள் முக்கியமான சில:
  • யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை வீட்டில் பார்த்து பேசி மணம் முடிப்பது என்பதை நினைத்தாலே எனக்கு அருவெறுப்பாயுள்ளது. "பெண்ணுக்காக திருமணம்" என்றல்லாமல் "திருமணத்திற்காக பெண்" என்ற நிலையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பஸ்ஸில் ஆபிஸ் போக கஷ்டமாக இருக்கிறது என்று நான் வாங்கிய பைக்கிற்கும் நான் கூட வாழப்போகும் மனைவிக்கும் அப்புறம் என்ன வித்தியாசம் எஞ்சுகிறது?
  • என்னைப் பொருத்தவரை திருமண வாழ்வில் மிக முக்கியமானது காதல். சிந்துபைரவி படம் என்னை ரொம்பவே பாதித்தது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் இருக்க வேண்டும் என்பதையும் எப்படிப்பட்ட நெருக்கம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் அந்தப்படம் தெளிவாகவே காட்டுகிறது. JKBக்கு அவரது மனைவி பைரவியின் மேல் இருப்பதும் காதல்தான். சிந்துவின் மேல் அவருக்கு இருப்பதும் காதல்தான். ஒரு மனிதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் மேல் ஒரே நேரத்தில் காதல் வயப்பட முடியும் என்பது அந்தப் படத்திலிருந்து (மற்றும் என் அனுபவத்திலிருந்தும்) நான் தெரிந்து கொண்ட விஷயம். அதைப்போலவே, ஒருவேளை சிந்துவை JKB முதலிலேயே மணம் புரிந்திருந்து, அதன் பின் பைரவியை சந்தித்திருந்தால் அவருக்கு பைரவியின் மேல் காதல் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. எனக்கென்னவோ "என் சிந்துவை" நான் அதிர்ஷ்ட வசமாக ஒரு நிச்சயக்கப்பட்ட திருமணத்தின் மூலம் சந்திப்பேன் என்று நம்பிக்கை இல்லை.
நடராஜ குரு ஒருமுறை சொல்லியிருக்கிறார்:
ஒரு பெண்ணின் பாலுணர்வை பாலுணர்வே இல்லை என்று கூறலாம். கர்ப்பமானால் பின் அவள் சிந்தனை முழுவதும் வயிற்றினில் வளரும் குழந்தையைப் பற்றி மட்டும்தான். அதைப் பெற்றெடுத்த பிறகு அவளது தாய்மை உணர்வு கூடுதலாகும். பின்னர் அவளுக்கு அதைவிட விருப்பமானது ஒன்றுமேயிருக்காது. அவ்வாறாக பெண்ணின் பாலுணர்வில் ஒரு உட்பொருள் உண்டு. மிருகத்தனமான தூய பாலுணர்வு பெண்ணிற்கு இல்லை. ஆணிற்குத்தான் உண்டு.
இதையே விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலனின் ஏமாற்றத்திலும் காணலாம். திடீரென ஒருநாள், உங்கள் மேல் உயிரையே வைத்திருந்த காதலிக்கு உங்கள் மேலுள்ள கவனம் குறைவதை உணர்கையில் எப்படி இருக்கும்?

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் என்னுடைய சுயநலமும் கோழைத்தனமும் தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. சுயநலமும் கோழைத்தனமும் இயல்பாகவே "கெட்டவை" என்ற பள்ளிக்கூடம் சாரந்த நம்பிக்கை என்னிடம் இப்போது இல்லையாகையால் சுயநலமியாகவும் கோழையாகவும் இருப்பதில் பெரிய வருத்தமில்லை.

ஒருவேளை திருமணத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏதோ ஒரு "பைரவியை" திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் எந்த "சிந்துவையும்" சந்திக்காமல் ரொம்ப எளிமையாகவே என் வாழ்க்கை முடிந்து விடலாம். இருந்தாலும் ஒரு பாழுங்கிணற்றில்(?) தெரிந்தே குதிக்க எனக்கு தைரியமில்லை.

எது எப்படி இருந்தாலும் விதிப்படி நடப்பது நடந்தே தீரும். வேறென்ன சொல்ல?

கருத்துகள்

  1. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
    வாடி இருக்குமாம் கொக்கு.

    சிந்துனு நீங்க நினைக்கிறது சிந்துவாவே இருந்தா ஓகே.

    இல்லாம, நீங்க கல்யாணம் பண்ண சிந்துவ விட ஒரு நல்ல சிந்து, கல்யாணத்துக்கு அப்புறமா தெரிய வந்தா ;-)

    All the best.

    பதிலளிநீக்கு
  2. "நீங்க கல்யாணம் பண்ண சிந்துவ விட ஒரு நல்ல சிந்து, கல்யாணத்துக்கு அப்புறமா தெரிய வந்தா"

    அப்படி தெரிய வந்தா, முதல்ல கல்யாணம் பண்ணின பெண்ணோட பெயரை "பைரவி"னு மாத்திருவோம் :)

    பதிலளிநீக்கு
  3. இன்னைக்கு நமக்கு சரின்னு படுறது நாளைக்கு தப்புன்னு தோணலாம்.

    பதிலளிநீக்கு
  4. இப்போ உங்க மனைவி உங்களுக்கு பைரவியா இல்லை சிந்தா ............ இல்லை நீங்க நிச்சதை விட நல்ல சிந்தா........ இல்லை நல்ல சிந்து இன்னும் வரலையா ............ :( பதில் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 வருஷத்துக்கு முந்தி நடந்ததை வச்சு இப்போ கேள்வி கேட்கிறது அநியாயம் :) 5 வருஷத்துக்கு முந்தி எடுத்த photo மாதிரிதான் 5 வருஷத்துக்கு முந்தி எழுதுன கருத்துக்களும். இப்போதைய நிலைக்கும் அதுக்கும் இடையில வித்தியாசங்கள் இருக்கும். அதனால இதைப்பத்தியெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்க.

      நீக்கு
    2. புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முலைக்குமுனு நான் என்ன கணவா கண்டேன்....ha ha ha. வாழ்க வளமுடன்.

      நீக்கு
    3. வாழ்க்கை என்னும் ஓடம், வழங்குகின்ற பாடம்... :)

      நீக்கு
    4. நல்ல விளக்கம்.........தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி muthu kannan :)

      நீக்கு
  5. உங்கள் தங்கை அல்லவா அதான் பெரியா கொடுக்கு எப்புடி ....... :P Amarnath

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்