அறிகுறிகள்

மடியில் படுத்து அழத்தோன்றும்.
விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனாய்
மலைத்து நிற்கும்.
கண்மூடி இருக்கையில்
தலையின்கீழ் உடலும், உடலின்கீழ் உலகும்
நழுவிப்போய் நாடகமாடும்.
ஏதோ ஒரு வசனத்தை திரும்பத் திரும்ப
சொல்லிப் பார்க்கும்.

மரணப்படுக்கையிலும்
ஒவ்வொரு காதலிலும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

மருத்துவம்