பீமா

படம் பார்த்து முடித்த அடுத்த நொடியில் இதை எழுதுகிறேன். லிங்குசாமி 'ஜி'க்கு அடுத்து இப்படி ஒரு படம் எடுத்திருக்க வேண்டியதில்லை. நான்கு வரிக் கவிதையில் சொல்ல முடிந்ததை படமாக எடுப்பதோ, மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று படம் எடுப்பதோ எப்படி அவர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது என்றுதான் புரியவில்லை.

படத்தில் மொத்தமே இரண்டு சீன் அல்லது வசனம் தான் எனக்குப் பிடித்தது. எந்தக் காட்சி என்று இப்போது நினைவிலில்லை. தயிர்சாதத்தைக் கூட கேவலமாக சமைக்க முடியும் என்று எங்கள் ஆபிஸில் சாப்பிட்டால் புரியும். அதுபோலவே ரொம்ப எளிதாக நன்றாக அமைக்க முடிந்து காட்சிகளில் கூட கோட்டை விட்டது எனக்கு ஏமாற்றமே. பல காட்சிகள் பழைய படங்களிலிருந்து சுடப்பட்டது வேறு இம்சை.

"யார் சாமி இவன்? சத்தியமா சொல்றேன், இருபத்தஞ்சு வயசுல என்னையே பாத்த மாதிரி இருக்கு டயலாக்கை டிரெய்லர்ல பாக்கும்போதே டவுட் ஆனேன்" என்றுதான் மனதிற்குள் தோன்றுகிறது :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’