காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப

தற்செயலாக பாகவதரின் இந்தப் பாடலைக் கேட்க நேரிட்டது.  மனம் கனக்கும் வேளைகளில் எப்போதுமே கவிதையின் மடியில் சரணடைவது என் வழக்கம்.  YouTube-ல் கண்ணதாசன் பாடல்களைத் தேடும்போது தற்செயலாக இந்தப் பாடலைக் கண்டுபிடித்தேன்.
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப - வீண்
காலமும் செல்ல மடிந்திடவோ
முதல் முறை கேட்கையில் ரொம்பவே அற்புதமாகத் தோன்றியது.  திரும்ப ஒருமுறை கேட்கும்போது தான் ஒரு அடிப்படைத் தவறு புரிந்தது.  காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப விலங்குகள் அலைவதில்லை.  விலங்குகள் பயத்தாலோ அல்லது பசியாலோ மட்டுமே மற்றவைகளைத் தாக்கும்.  விலங்குகள் நீலப்படம் பார்ப்பதோ வற்புறுத்தி உடலுறவு கொள்வதோ கிடையாது.  காமத்திலும் வன்முறையிலும் விலங்குகள் போல் நாம் நேர்மையாய் இருந்தால் உலகில் இத்தனை பிரச்சனைகள் இருக்காது!

(என்னாதுங்க? கவிதை சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாதா.  சரியாச் சொன்னீங்க :)

கருத்துகள்

  1. > விலங்குகள் நீலப்படம் பார்ப்பதோ வற்புறுத்தி உடலுறவு கொள்வதோ கிடையாது.

    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதற்கு உடலுறவு கொள்ளுவதில் இருக்கும் ஒற்றுமையும் ஒன்றென்று படித்த ஞாபகம். மேலும், சில மிருகங்கள் வற்புறுத்தி உடலுறவு கொள்வதும் உண்டு. இந்த "hybrid" வகை உயிரினங்கள் (liger, tigon) எல்லாம் தோன்றுவதற்கு மிருகங்களிடம் இருக்கும் காமமும் காரணம் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கணேஷ், தகவலுக்கு நன்றி. கொஞ்சம் யோசிக்காமத்தான் எழுதிட்டேன் போல... :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்