குருவும் சீடனும்

மேன்மையான குருநாதர்களைக் கொல்வதற்குப் பதில் பிச்சையெடுத்து உண்பது சிறந்தது. உலகியல் விருப்பமுள்ள ஆசிரியர்களைக் கொன்றபின் அவர்களின் உதிரம் படிந்த போகங்களைத் தானே இங்கு நான் அடைய முடியும்? (215)

என்று கீதை இரண்டாம் அத்தியாயத்தில் சொல்கிறது. ஒரே சுலோகத்திலேயே அர்ஜுனன் குருக்களை மகானுபவர்கள் என்றும் பொருளாசை கொண்டோர் என்றும் ஏன் அழைக்கிறான்? இதற்குப் பதில் சொல்ல முடியுமானால் உங்களுக்கு கீதை புரிந்திருக்கிறது என்று நான் சம்மதிக்கிறேன்.
•••••••••••

கேள்வி: நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?
குரு: நம்பிக்கை என்ற சொல்லே சரியில்லையே. நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிப்பதுதான் என்னுடைய வழக்கம். கடவுள் இருப்பது கடவுள் குறித்த வரையறை மூலமே. அதனால் அந்த வரையறை தவறா சரியா என்று கேட்க வேண்டும். அப்படியென்றால் கடவுளுக்கு நான் கொடுக்கும் வரையறையை முதலில் தேட வேண்டும். உங்களுக்குத் தவறு நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong is God.
•••••••••••

இவை குருவும் சீடனும் என்னும் எனி இந்தியன் பதிப்பக புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டவை. இப்போது தான் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தைப் படிக்க என் விதியில் இடமிருந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய, அல்லது வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=104514

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’