ஞாயிறு, 30 நவம்பர், 2008

கால்தானே

தன்னையறியாமல் வந்த விசும்பலை
மீண்டும் அடக்கினேன்.
கண்ணீர் வந்துவிடவில்லை.
நல்லவேளை, யாரும் கவனிக்கவுமில்லை.
பயந்தா போயிருக்கிறேன்?
தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்
"கால்தானே போய்விட்டது. அதனாலென்ன?"