இடுகைகள்

ஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி

ஆதி இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர்.  காளி கசாப்புக் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்து குலத் தொழிலையே செய்து வருபவர். ஆதியின் நட்பாலும், அவரது ஆஸ்ரமத்தின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்த அனுபவத்தாலும் காளிக்கு தனது 'கொலைத் தொழிலைப் பற்றி' ஒருவகைக் குற்ற உணர்வு மனத்துள் வளர்ந்ததுதான் கண்ட பலன். அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள காளி முயன்ற போது, அவன் நம்பிய இந்துமதப் பெரியவர்கள் எல்லாம் ஒரே குரலில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே அதிகம் பேசினார்கள்!  'தான் ஒருவன் ஜீவகாருண்யவாதியாய் ஆகிவிடுவதால் இந்த விலங்குக்கு என்ன காருண்யம் நேர்ந்துவிடப் போகிறது...?  ஒரு பாவத்திலிருந்து தனியொரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சனை?  அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப் படுவதற்கு என்ன வழி?  அப்படி தவிர்க்கவொண்ணாத ஒரு செயல் -- ஒரு தொழில் -- ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?  உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் தாவர உணவையே உட்கொள்வது என்று தீர்மானித்து விட்டால், மனித வாழ்க்கை இன்னும் பல நெருக்கடியான பிரச்சனைகளில் சிக்கி அல்லலுறும்.  உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ...

அச்சம் தவிர்

படம்
அஞ்சாதே படத்தின் அச்சம் தவிர் பாடலை சில நாட்களுக்கு முன் தற்செயலாகக் கேட்கும்போது தான் கவனித்தேன்.   புதிய ஆத்திசூடியில்  மீண்டும் மீண்டும் பாரதியார் வலியுறுத்துவது பயப்படாமல் இருக்க வேண்டுமென்பதைத் தான்.  கீழ்க்கண்ட அத்தனையும் நேரடியாக பயத்தை விடச்சொல்லும் வரிகள்: அச்சம் தவிர் கீழோர்க்கு அஞ்சேல் கேட்டிலும் துணிந்து நில் சாவதற்கு அஞ்சேல் செய்வது துணிந்து செய் தீயோர்க்கு அஞ்சேல் தொன்மைக்கு அஞ்சேல் தோல்வியில் கலங்கேல் பேய்களுக்கு அஞ்சேல் கொஞ்ச நாள்களுக்கு முன் என் பயத்தை நானே நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  சின்னச் சின்ன விஷயங்களில் கூட பயப்படுவதையும் அதனால் வாழ்க்கையில் தோன்றும் மாறுதல்களையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.  பயம் புற்றுநோய் போலப் பரவி நம் வாழ்க்கையையே அழித்துவிட வல்லது.  அதனால் தானோ என்னவோ பாரதியும் பயத்தை உதறுமாறு பல கவிதைகளில் அறிவுறுத்துகிறார்.  (அச்சமில்லை பாட்டை அறியாதவர் உள்ளனரா என்ன!) மேலுள்ள வரிகள் தவிர்த்து, புதிய ஆத்திசூடியில் என்னைக் கவர்ந்த வரிகள் இவை: கற்றது ஒழுகு காலம் அழியேல் தன்மை இழவேல் தாழ்ந்து நடவேல் து...

சோடியமுகம்

காலப்பயணம் முடித்து இப்போது தான் திரும்பினேன். அணுக்களைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை தான். சோடியம் தான் கிடைத்தது. பார்த்தேன், பல நூறு சோடியத்தை. எல்லாமே 11 எலெக்ட்ரான் தான். ஆயினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகம். சாப்பிட அமர்ந்தேன். அத்தனை முகமும் சிரித்தது ஒரு சோற்றுப் பருக்கையிலிருந்து.

தாத்தா

சின்னப் பையனாய் இருக்கும் போது என் கண்ணில் எப்போதுமே முதலாகப் பட்டது என் தாத்தாவுக்கு என்னை விட என் அண்ணன் மேல் பிரியம் அதிகம் என்பதுதான்.  அவருக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும்.  பாட்டு, நாடகங்களும் கூட.  அவருக்குக் கதைகள் படித்துக் காட்ட வேண்டியது என்னுடைய ஒரு வேலை. நேற்று வாசித்த ஜெயமோகனுடைய அறம் கதையில் வரும் "லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க" என்ற வரி மனதில் நின்று யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது.  என் தாத்தா பல புத்தகங்கள் வைத்திருந்தார்.  பலவற்றை வீட்டில் யாரும் படிப்பதேயில்லை.  நான் படிக்க முயன்ற சில புத்தகங்கள் எனக்கு சுவாரசியமாய் இல்லை என்பதை விட எனக்குப் புரியவில்லை என்பதே சரியாக இருக்கும்.  என் அப்பாவுக்கு படிப்பதில் ஆர்வம் கொஞ்சம் உண்டு என்றாலும் என் தாத்தாவைப் போல் புத்தகங்கள் எதுவும் அவர் சேர்த்து வைக்கவில்லை. எனக்கு 18 வயது இருக்கும் போது என் தாத்தா இறந்தார்.  அந்த சமயத்தில் அவருக்கு வயதாகி உடல் நலமும் சரியில்லாமல் இருந்ததால் முன்பு மாதிரி அவரிடம் என்னால் நெருக்கமாய் இருக்க ம...

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்

இரண்டு வாரங்களுக்கு முன் சிட்னியில் டார்லிங் ஹார்பரில் வெட்டியாய் உட்கார்ந்திருந்தேன்.  சுற்றுலாப் பயணிகள் நிறைந்த அந்த இடத்தில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது ஒரு விதமான அனுபவம்.  அப்போது ஒரு பறவை எங்கிருந்தோ பறந்து வந்து எனக்கு அருகில், கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தூரத்தில் அமர்ந்தது.  ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாய் இருந்த அந்த இடத்தில் அது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டது.  அவ்வப்போது யாரேனும் அருகில் வந்தால் மட்டும் விலகி நகர்ந்து கொண்டது. அப்படி நகரும்போது தான் கவனித்தேன் அந்தப் பறவையின் கால்கள் பெரிதாக சேதமடைந்திருப்பதை.  நடப்பதே கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் நடந்தது.  ஒரு ஊனமுற்ற பறவையை நான் பார்ப்பது இது முதல் தடவையல்ல .  ஒவ்வொரு முறையும் என் மனதில் தோன்றுவது இது தான்.  அந்த ஊனத்தை "ஐந்தறிவு" ஜீவிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.  ஊனமேதும் இல்லாத மற்ற பறவைகளின் அதே வாழ்க்கையைத் தான் ஊனமுற்ற இந்தப் பறவைகளும் வாழ்கின்றன.  ஆனால் ஊனமுற்ற மனிதன் என்றால் மட்டும் நாம் எத்தனையோ விதமான வேறுபாடு காட்டுகிறோம்.  நாம் காட்டும...

மன்மதன் அம்பு

காதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான்.  காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.  புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம்.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-) படத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்தது.  உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது.  அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.  ஒரு உதாரணம்.  ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்த...

கடலோடி

"மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..." என்று வடிவேலு சொன்னதும் பளார் என்று ஒரு அறை விட்டு "ஆடு எப்படிடா பேசும்?" என்று கேட்பார் கவுண்டமணி.  இந்தக் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது எஸ் ராமகிருஷ்ணனின் கோடுகள் இல்லாத வரைபடம் என்ற புத்தகத்தில் "கடலோடி" என்ற வார்த்தையைப் படித்ததும்.  (கடல்ல எப்படிடா ஓடுவ?) நாடு நாடாக ஓடுபவன் நாடோடி, கடல் கடலாக ஓடுபவன் கடலோடி.  கடலோடி என்ற வார்த்தையை எண்ணிப் பார்க்கையில் மனதில் உண்டாகும் அதிர்வுகள் என்னை ஆச்சர்யப்பட வைக்கின்றன.  நாடோடியாக அலைந்து திரிய வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த எனக்குள், கடலோடியாக அலையும் கனவு எழத் தொடங்கி விட்டது.  மனிதனே எல்லா விலங்குகளையும் விட தொலைதூர ஓட்டத்தில் சிறந்தவன் என்று என் நண்பர் ஒருமுறை சொன்னார்.  மான்களை வேட்டையாட அவற்றை விடாமல் துரத்துவதே போதுமாம்.  ஓடிக் களைத்த மானை மிக எளிதாகக் கொல்லலாம்.  ஆனால் நம்பிக்கையும் பொறுமையும் அவசியம் -- விடாமல் மானின் பின்னே சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அது போலத்தான் கடல் கடப்பதும்.  எத...