வெள்ளி, 18 மே, 2012

மிச்சம்

தொண்டை வரை வந்தும்சொல்லாமல் போன வார்த்தைகள்.
பாதி எழுதியபின் அனுப்ப மனமில்லாமல் கிழித்தெறிந்த கடிதங்கள்.
கடையில் பார்த்து, பிடித்து, ஆனாலும் உனக்காக வாங்காத பரிசுகள்.
தினமும் வந்து போகும் நினைவுகளைத் தவிர்த்தால்,
உனக்கும் எனக்குமான உறவில் இவைதான் மிச்சம் இப்போது.