வைரமுத்துவின் ‘பாற்கடல்’

வைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-)  இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை.

பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.  பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன.  ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.

கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”

கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.

கருத்துகள்

  1. "கே: வாழ்க்கை என்பது?
    ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்."
    Very true :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் படித்தவுடன் பிடித்திருந்தது.

      நீக்கு
  2. உண்மையில் சரி

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

    வாழ்க்கை என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப யோசிக்காமல் உடனே மனதில் தோன்றுவதைச் சொல்கிறேன். வாழ்க்கை என்பது நாடகம். "சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை" என்றுதானே வாழ்க்கை போகிறது? :)

      நீக்கு
  5. அப்போ ஒருவனுடைய வாழ்க்கை அவன் அனுபவத்தை வைத்து போவது இல்லையா.அந்த அனுபவம் தருகிற பாடம் தானே இந்த கண்ணீரு,சிரிப்பு எல்லாம். இது சரியா இல்லை தவறா எனக்கு கொஞ்சம் குழப்பம் தான் இதில்.

    இதற்க்கு பதில் நிறைய இருப்பதால் என் blogger இல் எழுதி உள்ளேன் தயவு செய்து அதை படித்து விட்டு இதில் பதில் தெரிவிக்கவும்.http://subathrakannan.blogspot.com.au/2013/02/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து அவரவர் பாடங்களைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். யோசித்து வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் யோசித்துச் செய்யட்டும்; மனம்போல் வாழ விரும்புபவர்கள் மனம்போல் வாழட்டும். எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் உண்டு. நான் செய்வதுதான் சரி என்றோ நான் செய்வதுதான் தவறு என்றோ வாதிடுவது அவ்வளவு முறையாக இருக்கும் என்று தோன்றவில்லை.

      இதெல்லாம் எனக்கு மட்டுமான சொந்தக் கருத்துதான். மற்றவர்கள் இதை ஏற்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. அதேபோல் இந்தக் கருத்துக்கு நான் தாலி கட்டிக்கொண்டுவிடவுமில்லை. இன்னும் கொஞ்சநாளில் என் கருத்து மாறலாம். ஆனால் இப்போதைக்கு இதுதான் என் கருத்து.

      நீக்கு
  6. நான் சொன்னது எல்லா சமயங்களிலும் யோசித்து முடிவெடுங்கள் என்பது அர்த்தம் இல்லை. கண்ணீர் என்ற ஒன்று வரும் போது அது ஏன் வந்தது இனி அது வராமல் இருக்க எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன். முதல் முறை நடந்த இந்த தவறு அடுத்த முறையும் வந்துவிட கூடாது என்பதற்காக சொன்னேன். எல்லா சமயங்களிலும் முடிவெடுத்தே செய்தால் வாழ்க்கை கொஞ்சம் எரிச்சலாகதான் தோன்றும்.

    எல்லாம் நேரம் காலம் வரும்போது தானாகத் தெரியவரும் நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டும் என்பது என் கருத்து அல்ல. மனபாரம், கஷ்டம் என்ற ஒன்று வரும்போது மட்டும் இதை செயல்படுத்தி பாருங்கள் என்று தான் சொன்னேன். வேற நான் சொல்லுவதற்கு என்று ஏதும் இல்லை. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்