இடுகைகள்

நந்தலாலா

இதைவிடக் கேவலமா ஒரு படத்தை மிஷ்கின் எடுக்க முடியுமாங்கிறது கொஞ்சம் சந்தேகம் தான்.

வண்டித்தடம்

பள்ளிக்கூட நாள்களில் முழங்கால் போடுவது ஒரு பொதுவான தண்டனை.  மணல் தரையில் கூட முழங்கால் போடச் சொல்வார்கள்.  மைதானத்தில் வகுப்பு இருந்தால் மைதானத்து மணல் தரையில்தானே முழங்கால் போட முடியும்!  வகுப்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது.  அதனால் பலமுறை தண்டிக்கப் பட்டிருக்கிறேன்.  தாமதமாக வருவது, வீட்டுப் பாடம் முடிக்காதது என்று பல விதங்களிலும் தண்டனை பெற்றிருப்பதால் முழங்கால் போடுவதெல்லாம் அப்போது எனக்கு ரொம்ப சாதாரணம். முழங்கால் போட எப்போதும் துணை இருக்கும்.  எந்தத் தவறாயினும் நம்முடன் சேர்ந்து ஒரு ஐந்தாறு பேரும் செய்திருப்பார்கள்.  "எப்பா... காலு வலிக்கி(து)" என்று பையன்கள் இடையிடையே உட்கார்வதோ நிற்பதோ உண்டு.  அப்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், உண்மையிலேயே இவர்களுக்குக் கால் வலிக்கிறதா இல்லை சும்மா அப்படிச் செய்கிறார்களா என்று.  நேர்மையாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு அப்போதே இருந்தது.  அதனால் தண்டனையில் ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காது.  எனக்குக் கால் வலித்ததும் இல்லை. சில வருடங்களுக்கு முன் கால் உடைந்து சரியாகிக் க...

அருணாச்சலம் பாடல்கள்

படம்
பல வருடங்களுக்குப் பிறகு அருணாச்சலம் படப் பாடல்களை இன்று கேட்டேன்.  ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தது "சிங்கம் ஒன்று புறப்பட்டதே".  மலேசியா வாசுதேவன் பாடத் தொடங்கியதும் வில்லுப்பாட்டு தெருக்கூத்து மாதிரி ஒரு பின்னணி இசை தொடங்கி என்னை ரசிக்கவே விடாமல் பண்ணி விட்டது.  கம்பீரமான பாடலாக இருக்க வேண்டியது காமெடிப் பாடல் மாதிரி ஆகிவிட்டது.  (கலர் கனவுகள் படத்தில் வரும் "சப்பா சப்பா" பாட்டில் வரும் இசை தான் ஞாபகத்திற்கு வந்தது.) அடுத்தது "அதான்டா இதான்டா". ஏகப்பட்ட தடவை கேட்ட பாடல்தான்.  ஆனால் இன்று தான் ஒரு விஷயத்தை கவனித்தேன்.  எஸ் பி பாலசுப்பிரமணியம், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தை மனதில் வைத்துப் பாடியிருக்கிறார்.  "என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணிமையும் நீதான், என் தோள்களிலே முழுபலமாய் இருப்பவனும் நீதான்" என்பது போன்ற வரிகளில் அந்தத் "தானை" அழுத்தி உச்சரிக்காமல் சாதாரணமாகப் பேசுவது போல் பாடியிருக்கிறார்.  அழுத்தி உச்சரித்தால் அது மேடையில் சொற்பொழிவு ஆற்றுவது போல் ஆகியிருக்கும். ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி இளம் பாடக...

நெற்றிக்கண்

விசு படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும் குறிப்பாக எஸ்வி சேகர், கிஷ்மு எல்லாம் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.  விசு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எப்போதுமே அதிரடியாகத் தான் சொல்வார்கள்.  அதிகமான நாடகத்தன்மை இருக்கும் -- அந்த நாடகத் தன்மைக்காகவே அந்தப் படங்களை நான் ரசித்திருக்கிறேன்.*  பிடிக்கும் என்றாலும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வாழ்க்கையைப் பற்றி அவர் படங்கள் என்னை பாதித்ததில்லை. நெற்றிக்கண் .  பார்க்க ஆரம்பிக்கையில் பாலச்சந்தர் படம் என்று தான் நினைத்தேன்.  (பட ஆரம்பத்தில் யார் பெயரையும் கவனிக்கவில்லை.)  பாலச்சந்தர் படம் மாதிரி இல்லாததால் கொஞ்சம் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.  பாலச்சந்தருடைய பாணி இதுவல்ல.  விசுவைப் போல "குற்றம் புரிந்தவனுக்குத் தண்டனை" என்ற மேம்போக்கான நியாயம் பேசும் படங்கள் பாலச்சந்தருடையவை அல்ல.  பாலச்சந்தர் படங்களில் "கெட்டவர்கள்" யாரும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம், அந்த நியாயங்களைச் சுற்றி நகரும் கதையில் நல்லவரோ கெட்டவரோ இருப்பதில்லை. நெற்ற...

காலநேரம்

"பணம் என்பது மனிதர்களுடைய வாழ்வை எளிமையாக்கும் நோக்கத்தோடு கண்டுபிடிக்கப் பட்ட சாதனம், ஆனால் அது எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது" என்று வினோபா பாவே சொன்னதாகப் படித்திருக்கிறேன்.  கடிகாரங்களும் நாட்காட்டிகளும் அதே கணக்கில் தான் சேரும் என்று தோன்றுகிறது.  "நேரம்" என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே கஷ்டப்படுத்திக் கொள்கிறோமோ?

தவம்

பருவம் முழுவதும் வயலில் உழைத்தேன். அறுவடை முடிந்ததும் கடவுள் சொன்னார் "அப்படியே ஆகட்டும்".

ஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி

ஆதி இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர்.  காளி கசாப்புக் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்து குலத் தொழிலையே செய்து வருபவர். ஆதியின் நட்பாலும், அவரது ஆஸ்ரமத்தின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்த அனுபவத்தாலும் காளிக்கு தனது 'கொலைத் தொழிலைப் பற்றி' ஒருவகைக் குற்ற உணர்வு மனத்துள் வளர்ந்ததுதான் கண்ட பலன். அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள காளி முயன்ற போது, அவன் நம்பிய இந்துமதப் பெரியவர்கள் எல்லாம் ஒரே குரலில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே அதிகம் பேசினார்கள்!  'தான் ஒருவன் ஜீவகாருண்யவாதியாய் ஆகிவிடுவதால் இந்த விலங்குக்கு என்ன காருண்யம் நேர்ந்துவிடப் போகிறது...?  ஒரு பாவத்திலிருந்து தனியொரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சனை?  அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப் படுவதற்கு என்ன வழி?  அப்படி தவிர்க்கவொண்ணாத ஒரு செயல் -- ஒரு தொழில் -- ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?  உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் தாவர உணவையே உட்கொள்வது என்று தீர்மானித்து விட்டால், மனித வாழ்க்கை இன்னும் பல நெருக்கடியான பிரச்சனைகளில் சிக்கி அல்லலுறும்.  உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ...