ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வேற்று சாதிக்காரன்

புதியவனின் ஒவ்வொரு அசைவிலும்
அவன் வேற்று சாதிக்காரன் என்பது தெரிந்தது.
நாலைந்து இரவுகள் கழிந்தபின் கேட்டேன்
ஏன் வினோதமாய் நடந்துகொள்கிறான் என்று.
"உங்களைப் போல இருக்க முயல்கிறேன்" என்றான்.