செவ்வாய், 22 டிசம்பர், 2009

மனம்

காய்ந்த எலும்பைக் கடிக்கும் நாய்
ஒருகணமும் அவ்வெலும்பை விட்டகலாமல்
தன் உயிர்போல் காப்பதைப் பார்த்திருக்கிறாயா?

எலும்பைத் தின்ன முடியாதென்பது
அந்த நாய் அறியாததா என்ன!

அத்தனை நாடகமும் அடுத்தொரு
கறித்துண்டு கிடைக்கும் வரை தான்.