இருமை

கணந்தோறும் நதி கரையையும் கரை நதியையும் மறு நிர்ணயம் செய்தவாறே உள்ளன.

வற்றி மெலிந்து ஓடும் நதி கரையைத் தன்பால் இழுத்து இறுக்குகிறதா, இல்லை கரை நதியை அழுத்தி நெருக்கி ஒடுக்குகிறதா?

காய்ந்து காணாமலாகும் நதி கரையையும் அழித்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறதா, இல்லை பெருகிக்கொண்டே போகும் கரை நதியை அழிப்பதால் தானும் அழிகிறதா?

கரையில்லாத நதியொன்றிருப்பின் அதை நாம் நதியென்றுதான் அழைப்போமா?

கருத்துகள்

 1. கவிஞர் யுவன் எழுதியிருக்கிறார்.

  ”அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் பொழுதுகள் உருவாக்கும் கவிதைகளின் அனுபவம் உணர்ச்சிபூர்வமானது”

  அந்த மாதிரி ஒரு உணர்ச்சி பிரவாகம் என்னை வியாபித்தது. கற்பனை விரிவடையும் பொழுது அது அறிவார்த்ததின் பாதையில் நகர ஆரம்பிக்கும். அந்த பயணத்தில் முட்டி நிற்கும் ஒவ்வொரு நொடியும் இன்பமயமானது. அப்பொழுதுகளில் எழும் கேள்விகள் பரவசமூட்டக்கூடியவை. அந்த பரவச நிலையை சில நேரங்களில் சொற்களால் என்னால் வடிவப்படுத்த முடிவதில்லை. நீங்கள் செய்திருக்கிறீர்கள். அருமை.

  அப்பால ஒரு question...

  இது இருமையியத்திற்கு உவமையாகுமா என்பது என் ஐயம். இருமையியம் எப்பொழுதும் நல்லவையுடன் கெட்டவையும் உடன் வரும் என்பதைத் தானே குறிக்கும்? அப்படியிருக்கையில் நதியின் பிறப்பும் இறப்பும், கரையின் பிறப்பையும் இறப்பையும் (respectively) குறிக்குமென்னில் இவற்றை இருமைக்கு கீழ் இப்படி வகைப்படுத்தலாமா?

  பதிலளிநீக்கு
 2. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. வார்த்தைகளுக்கு என் மனம் எந்த அர்த்தம் கொடுக்கிறதோ அந்த அர்த்தத்தில் மட்டுமே என் எழுத்தில் அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட மொழி, மதம் உள்ளன என்பது என் எண்ணம். இது நிற்க.

  இன்பம் இல்லாமல் துன்பம் இல்லை. நீளம் இல்லாமல் குட்டை இல்லை. ஒளி இல்லாமல் இருள் இல்லை. இதையெல்லாம் பொதுமைப் படுத்தியபோது தோன்றியது தான் நதியும் கரையும். ஒளி என்ற நதி இருளாலாகிய கரைகளின் நடுவே ஓடுகிறது. ஒளி இல்லையேல் இருள் இருக்கும், ஆனால் அது இருப்பது நமக்குத் தெரியாது.

  என்னுடைய பயன்பாட்டில் இருமை என்பது மாறுபட்டு நிற்கும் அத்தனை ஜோடிகளையும் குறிக்கும்.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப கவனமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கீங்க XXXXX (XXXXX = முத்து/ மாங்கி/ குசேலன்???)

  என்னுடைய மொழி ’எல்லையில்லா வானம்’ என்கிற அளவிலேயே நிற்கிறது. நீங்கள் செய்வது போல் வடிவப்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டுமென நினைக்கிறேன். முயன்று பார்க்கிறேன். முயற்சியின் பலனை உங்களுக்கு அளிக்கிறேன் :)

  நதியின் பிறப்பும் கரையின் பிறப்பும் உடன்பிறப்புக்களாகியதால் நான் அவற்றை மாறுபட்ட இருவர் என்கிற ரீதியில் நினைக்கவில்லை. அந்த வகையில் என் மனம் உங்கள் மொழியை புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது புரிந்தது.

  பதிலளிநீக்கு
 4. ரொம்பப் புகழ்றீங்களோ? இருந்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கு :D நன்றி கணேஷ்!

  பதிலளிநீக்கு
 5. முத்து! உங்களுக்குரித்தான பாராட்டு.

  உங்க பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டமிட்டிருக்கிறேன். எல்லாமே ஒரு வகையில் பாராட்டுதானே :)

  உண்மையில் உங்க ஆள்மன தேடல் வியப்பாக இருக்கிறது. அந்த தேடலின் திசை அறிகையில் சந்தோஷமாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்