ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

அப்பா சீரியஸ், உடனே வரவும்

முகவரி மாறி என்னிடம் வந்த கடிதம்
இன்னமும் என் அலமாரியில்தான் இருக்கிறது.
அதைப் பார்க்கையில் மட்டும் யோசிக்கிறேன் --
மகனைப் பார்க்காமலே போய்ச் சேர்ந்திருப்பாரோ?