அறிவிப்பு: நான் ரசித்த மற்றவர்களின் படைப்பு -- பெரும்பாலும் ஓரிரு வரிகளை மட்டும் -- பதிப்பிப்பதற்காக மறு ஒலிபரப்பு என்னும் புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை. அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது. கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது. தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது. அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று. ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ? எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன். என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன். இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது. என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான...
வைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-) இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை. பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி. பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன. ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம். கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்? ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.” கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்? ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக