பொய்த்தேவு

நாவல் வாசிக்கும்போது அதிலிருந்து என் மனதிற்குப் பிடித்த சொற்றொடர்களைக் குறிப்பெடுத்து வைப்பது என்னுடைய வழக்கம்.  க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன்.  க.நா.சுவின் நடையே இப்படித்தானா இல்லை இந்த நாவல் இப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை -- சொல்ல வரும் அனைத்தையுமே கதையிலிருந்து பிரிக்கமுடியாத, தனித்து உபயோகிக்க முடியாத வாக்கியங்களாகவே எழுதியிருக்கிறார்.

பொய்த்தேவு என்ற தலைப்பின் அர்த்தம் கிட்டத்தட்ட நாவலைப் படித்து முடிக்கும் தறுவாயில்தான் எனக்கு விளங்கியது.  நான் படித்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லலாம்.  படித்து முடித்தபின், வாழ்க்கையைப் பற்றிய மலைப்பும், எனக்கான தெய்வங்கள் என்னென்ன என்ற கேள்வியும், ஒரு சிறந்த இலக்கியத்தைப் படித்த திருப்தியும், இந்தப் புரிதலுடன் மீண்டும் ஒருமுறை இந்த நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவலும் மனதில் ஓடுகின்றது.

நான் இவ்வளவு தூரம் ரசித்த ஒரு நாவலிலிருந்து இரண்டே வாக்கியங்கள் தான் சேகரித்து வைத்திருக்கிறேன் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.  இன்னொருமுறை வாசித்தால் இன்னும் சில நல்ல வாக்கியங்கள் கிடைக்குமோ என்னவோ.
  • கடவுளின் வழிகள் அனந்தமானவை; அற்புதமானவை; மனிதனின் அறிவுக்கு எட்டாதவை.
  • பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம்.  ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான்.  இரண்டு தன்மைகளையும் ஒரே மனிதனிடத்திலேயே படைச்சிருக்கான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’