வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை. அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது. கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது. தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது. அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று. ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ? எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன். என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன். இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது. என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான் இன்னும் நீராகவே இருந்து என்னுள் வாழும
long leave mudinju veelaiku vandhaa aapadi dhan irukum. poga poga sari ayidum.. don't worry
பதிலளிநீக்குRavi Varman super :)
பதிலளிநீக்கு