எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம். புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம். (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும். Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று. Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது. இவை முக்கியமான மாற்றங்கள்.) நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்: அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன. மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும். புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது. கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது. இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன. காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக...