இடுகைகள்

i என்னும் ஆங்கில எழுத்து

படம்
ஆங்கில எழுத்து ‘i’-யை தமிழ் ‘ஐ’ மாதிரி தான் நினைவு தெரிந்த நாள் முதல் உச்சரித்து வந்திருக்கிறேன்.  கொஞ்சநாள் முன்பு ஒரு ஆஸ்திரேலியர் lion என்பதை நம்மூரில் சொல்வது போல் உச்சரிக்காமல் கிட்த்தட்ட ‘லாயன்’ என்பது மாதிரி உச்சரிக்கும் போது தான் நான் எத்தனை காலம் ‘லயன்’ என்று தவறாக உச்சரித்து வந்திருக்கிறேன் என்பது விளங்கியது. hi என்பது ‘ஹை’ அல்ல ‘ஹாய்’ என்பது நம் பலருக்குத் தெரியும்.  (ஒருவேளை உங்களுக்குத் தெரியாதென்றால் இனிமேல் அதை ‘hai’ என்று எழுதாதீர்கள் :-).  அதைப் போலத்தான் lion என்பதையும் உச்சரிக்க வேண்டும் ( define lion என்று Google-ல் தேடி இந்த ஸ்பீக்கர் படத்தை அழுத்திப் பாருங்கள்).  இதைப் போலவே தான் biology என்ற வார்த்தையிலும் i-க்கு நாம் பொதுவாக வேண்டிய அளவு அழுத்தம் கொடுப்பதில்லை.  இது மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள் நாம் பேசும் ஆங்கிலத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

வானத்திலே திருவிழா

வானத்திலே திருவிழா வழக்கமான ஒருவிழா இடி இடிக்கும் மேளங்கள் இறங்கி வரும் தாளங்கள் மின்னலொரு நாட்டியம் மேடை வான மண்டபம் தூறல் ஒரு தோரணம் தூயமழை காரணம் எட்டுத்திசைக் காற்றிலே ஏகவெள்ளம் ஆற்றிலே தெருவிலெல்லாம் வெள்ளமே திண்ணையோரம் செல்லுமே பார் முழுதும் வீட்டிலே பறவைகூடக் கூட்டிலே தவளை மட்டும் பாடுேம தண்ணீரிலே ஆடுமே திறந்தவெளி வேடிக்கை ஆண்டு தோறும் வாடிக்கை

பல வேடிக்கை மனிதரைப் போலே

ஒரு குத்துமதிப்பாகத்தான் நாடோடிகள் படம் பார்க்கத் திரையரங்கில் போய் உட்கார்ந்தோம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு.  படத்தை முழுவதுமே ரசித்துப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.  நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் ரசிக்கும்படி இருந்தன. அதே மாதிரி குத்துமதிப்பாகத்தான் போராளியும் இப்போது பார்த்தேன்.  படத்தில் பாதியிலேயே இயக்குநர் சமுத்திரக்கனியைப் பற்றி விபரம் தேடிப் பார்க்க வைக்குமளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் என்பதை அறிகையில் "அதானே பாத்தேன்" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் (என்னவோ பாலச்சந்தர் பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி!).  சமுத்திரக்கனி, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயக்குநர். *** ஊருக்குப் போகும் சமயங்களிலெல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு.  ஆனால் திரையரங்கில் ஓடும் படங்களின் லட்சணத்தில் எந்தப் படத்தையும் போய்ப் பார்க்கத் தோன்றுவதில்லை.  (முன்பு மாதிரி நல்ல படம் எது என்று பகுத்தறியும் திறனில்லை என்பதும் ஒரு காரணம்.)  தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் காலத...

சார்பு

ஒரு கொடியில் வளரும் புழு அக்கொடியின் இலைகளையே தின்று உயிர் வளர்க்கிறது.  அந்தக் கொடிக்கோ அருகிலுள்ள மரத்தின் மேல் படராவிடில் வாழ்க்கையில்லை.  கொடியைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் மட்டுமென்ன, மண் இல்லாமல் நின்று விடுமா, இல்லை மழை இல்லாமல் வளர்ந்திடுமா?  எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமி சூரியனும் நிலவும் இல்லாமல் இருந்திடுமா? நடுக்கும் குளிரையும் எரிக்கும் வெயிலையும் நனைக்கும் மழையையும் நன்றியுடன் பார்க்க முடிந்தால் பார்ப்போம்.  அதன்றி வெறுப்புதான் நமக்கு வருமென்றால் அனைத்தையும் வெறுப்புடனே பார்ப்போம்.  குடியா முழுகி விடும்?  அப்படியே குடி முழுகிப் போனாலும் தான் என்ன?

தெய்வம் விட்டுப் போவதில்லே

தர்மதுரை ஆணென்ன பெண்ணென்ன பாடலில் வரும் வரி இது: “தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே”.  கேட்க நன்றாகவே இருந்தாலும், குறை காணா விட்டால் நமக்குத் தூக்கம் வருவதில்லை. ----- ஒருவர் தனக்குத் தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.  “கையில கிடைக்கிற பணத்தை எல்லாம் உடனே தங்கமா மாத்திருவேன் நான்.  கிராம் 240 ரூபாய் விக்கும் போது வாங்க ஆரம்பிச்சேன்.  அப்போவே அடேயப்பா இந்த விலையா தங்கம்னு மலைப்பா தான் இருந்துச்சு.  இப்ப விக்கிற விலையை அந்தக் காலம் யாரும் நெனச்சுக்கூட பாக்கலை.” அடுத்தவர் சொன்னார்.  “நான் நிலமாத்தான் வாங்கிப் போடுறது.  முதல் சேர்த்து வாங்குறது கொஞ்சம் கஷ்டம், ஆனா காலாகாலத்துக்கும் நம்ம பேர்ல இருக்கும்.  அழுகிப்போற சமாச்சாரமா...  தங்கம் கூட உங்களுக்கு நகையில போடப்போட மதிப்பு குறையும், ஆனா நிலம் எப்படிப் போனாலும் மதிப்பு ஏறிக்கிட்டேதான் போகுமே தவிர இறங்காது.” “நானும் கொஞ்சம் நிலம் வாங்குனேன், ஆனா தங்கம்னா வாங்குறதும் ஈஸி, சின்ன மதிப்புல கொஞ்சம் புரட்டுறதுக்கு எடுக்குறதும் ஈஸி.  பத்திரம், வில்லங்கம், அந்த மண்டையடியே...

தவறு

பூக்காத பூக்களுக்காக மன்னிப்புக் கேட்பதில்லை மரங்கள்.

அதிகாலை எண்ணங்கள்

வெற்றிடம் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  இங்க் ஃபில்லரால் மை ஊற்ற முடிவது வெற்றிடத்தால் தான்.  இங்க் ஃபில்லரை நாம் விரலால் அழுத்தும் போது அதன் உள்ளே உள்ள காற்று வெளியேறுகிறது.  நம் விரலை ஃபில்லரில் இருந்து எடுத்து அழுத்தத்தை நீக்கும் போது ஃபில்லருக்குள் காற்று கூட இல்லாத வெற்றிடம் உருவாகிறது.  வெற்றிடத்திற்கு ஒரு பண்பு உண்டு — அதன் அருகில் இருப்பது எதுவானாலும் விசையுடன் தன்னோடு ஈர்த்துக்கொள்ளும்.  இங்க் ஃபில்லரின் துவாரம் மைக்குள் மூழ்கி இருப்பதால் ஃபில்லர் மையை தன்னுள் இழுக்கிறது.  இது தான் புட்டிக்குள் இருக்கும் மை ஃபில்லருக்குள் ஏறக் காரணம்.  இதே அடிப்படையில் தான் அடி பம்பு, தண்ணீர் மோட்டார் எல்லாமே இயங்குகிறது. ========== ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?   ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்... அது உண்மைதான்.  காலையில் எழுந்ததும் சில கணங்கள் உங்கள் மனதில் எண்ணங்கள் ஏதும் தீவிரமாக இருப்பதில்லை.  முந்தைய தினம்...