வானத்திலே திருவிழா

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேளங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூயமழை காரணம்
எட்டுத்திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவைகூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுேம
தண்ணீரிலே ஆடுமே
திறந்தவெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்