சொல்லப்படாத சொற்கள்

காதல் என்று வருகையில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை.  ஆனாலும் என்னிடமும் தங்கள் ஏற்கப்படாத காதல் குறித்து சிலர் அறிவுரை கேட்டிருக்கிறார்கள்.  (அல்லது ஒருவேளை நானாகத்தான் சொல்லியிருக்கிறேன், அவர்கள் கேட்காமலேயே!)

என்னுடைய அறிவுரைகள் எளிமையானவை.  அதில் பிரதானமானது “நீ விரும்பும் அவளிடம் (அல்லது அவனிடம்) உன் மனதிலிருப்பதை நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்பது தான்.  எதையும் மிச்சம் வைக்காமல் மனதிலுள்ளவற்றைச் சொல்லிவிடுதல்.  அப்படிச் சொல்வதாலேயே நாம் விரும்பும் அந்த நபர் நம் அன்பை ஏற்றுக்கொண்டு விடுவதில்லை, ஆனால் சொல்லிவிடுவது நாம் இழந்துவிட்ட சமநிலையை நமக்கு மீண்டும் அளிக்கும்.  அந்த சமநிலையில் இருந்துகொண்டு நம் ஆசையைப் பார்ப்பதே மிகப் பெரிய மாற்றம்.

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொற்றொடர்: “கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன”.  படித்தவுடன் தோன்றியது இதுதான்.  நாம் சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் போன சொற்கள் நம்முள்ளேயே ஊறித் திளைத்து வளர்கின்றன... நம்முள் இருக்கையில் அவை வாலி போல் நம் பலத்தில் பாதியை உறிஞ்சி விடுகின்றன.  அவற்றை மீறி எதுவும் செய்ய முடியாமல் அந்த வார்த்தைகளை நாமும் உண்மையென்றே நம்பி விடுகின்றோம்.  சளியைத் துப்புவது போல் அவற்றை வெளியேற்றி விட்டால் ஆறுதல் கொண்டு முன்னகரத் தொடங்குவோம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்