அடுத்து எந்த மேகமோ?

அடியிலும் முன்னும் பின்னும்
காற்றுப்போகா இடைவெளியில்
ஆயிரம் கோடிப்பேர் என்னையும் சேர்த்து.

என் முன்னிருந்தவனை நான் தள்ள
அவன் முன்னிருந்தவனை அவன் தள்ளினான்.
என்னைத் தள்ளுபவனுக்காவது தெரியுமா
எங்கே தான் போகிறோமென்று?

ஏன் திடீரென்று இப்படிக் கத்துகிறார்கள்?
இந்தப் பள்ளத்தில் ஏன் குதிக்க வேண்டும்?
யோசித்து முடிக்குமுன் அருவியாய்ப் பொழிந்தேன்.
அப்படி எங்கே தான் போகிறோம்?

ஒரு உலர்ந்த பாறையில் தெறித்து வழிந்தேன்.
அர்த்தமின்றி ஓடிய அத்தனை பேரையும் பார்த்தேன்.
வெயில் சுடத்தொடங்கியது.  ஐயோ மறுபடியுமா?

கருத்துகள்

  1. படிமம் அழகாய் வெளிப்பட்டிருக்கிறது. இன்னும் கூட படிமத்தை படிமமாக விட்டிருக்கலாம்.

    தள்ளுதலும் தள்ளப்படுதலும் நகர்வுக்காக மட்டுமல்ல. அது இயல்பு.

    பதிலளிநீக்கு
  2. உங்களால் உந்தப்பட்டவன்....முடிந்தால் அடுத்த மேகத்தில் சந்திப்போம்.

    -அமர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்