கவிதைக்குப் பொய்யழகு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

எதிலிருந்தெல்லாம் விலகியிருக்கிறோமோ அவற்றாலெல்லாம் நாம் துன்பப் படுவதில்லை.  எவ்வளவோ நாளுக்கு முன் கேள்விப்பட்ட குறள்.  இருமை என்பது நாம் பார்க்கும், கேட்கும், உணரும், எண்ணும் அனைத்தின் இயல்பு என்பதை அறியாத நாளில் "சாமியாராய்ப் போய் விட்டால் துன்பப்பட மாட்டாய்" என்று இந்தக் குறள் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.  இப்போது இந்தக் குறளை நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றுவது இந்தக்குறள் ஒருபாதி உண்மையை மட்டுமே சொல்கிறது என்பது தான்.

எவற்றிலிருந்து நாம் நீங்கியிருக்கிறோமோ, அவற்றின் மூலம் நாம் துன்பப்படுவதில்லை என்பது என்னவோ உண்மைதான்.  ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பமும் நமக்குக் கிடைக்காது என்பதையும் நாம் மறக்கக் கூடாது அல்லவா?

ஒரு இலக்கியத்தின் ஆசிரியரின் கருத்தை நாம் தவறென நினைக்கும்போது, அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  "வள்ளுவர் இந்தக் குறளில் அவருக்குத் தெரிந்த அறுதி உண்மையைச் சொல்லி விட்டார், அவரை விட எனக்கு அதிகம் தெரியும்" என்று நான் நினைக்கலாம்.  மாறாக, வள்ளுவர் வேண்டுமென்றே பாதி உண்மையை எழுதி வைத்தார் என்றும் நினைக்கலாம்.  எதற்காக அப்படி உண்மையைக் குறைத்து எழுத வேண்டும்?  எத்தனையோ காரணங்களுக்காக.  உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.

இருமை தத்துவத்தை (உலகில் நாம் உணரும் அனைத்தும் நேர், எதிர் அம்சங்களால் ஆனது.  நேரை அழித்தால் எதிரும் சேர்ந்தழியும், எதிரைக் கொணர்ந்தால் நேரும் சேர்ந்தே வரும்) நான் தத்துவமாகப் படிக்கும்போது அது எனக்கு அறிவை மட்டுமே கொண்டு வந்தது.  அந்த அறிவும் இந்தக் குறளும் சேர்ந்து என்னைச் சிந்திக்க வைத்தது.  இருமை என்றதும் இப்போது எனக்கு இந்தக் குறள் ஞாபகம் வரும்.  உள்ளதை உள்ளபடி சொல்பவர் அல்ல குரு, உள்ளதை உள்ளபடி நாம் அறிவதற்கு வழியமைத்துக் கொடுப்பவரே குரு.  அந்த வகையில், வள்ளுவர் எனக்கு ஒரு நிஜமான குருவாக இருக்கிறார், இந்தக் குறளின் மூலம்.

பாதி வரைந்து முடிக்கப்படாத ஓவியத்தில் இருக்கும் அழகு பொய் சொல்லும் கவிதையிலும் இருக்கிறது.  இந்தக் குறளுக்கு அது சொல்லும் பொய்யே அழகு.

கருத்துகள்

  1. The second paragraph made me sit up and re-read. You are right. When we get away from someone or something, the relief or consequence can be double-edged.

    FYI, I am in Indonesia, Jakarta, and just happened to google for best tamil blogger out of curiosity, as I usually read blogs of interesting writers. My google search for best tamil blogger led me to your blog in the first place. I realize that it is not a surprise, though many other bloggers also write excellent Kavithaigal.

    பதிலளிநீக்கு
  2. One more point I wish to add is that I am now reading all your postings in one go, and that is why, my comments appear on the same day.

    பதிலளிநீக்கு
  3. Welcome to my blog, Chandramouli :) I mostly write for my own self-discovery. I am glad that some of my visitors like them too.

    பதிலளிநீக்கு
  4. (உலகில் நாம் உணரும் அனைத்தும் நேர், எதிர் அம்சங்களால் ஆனது.)
    இருமை தத்துவம்ங்கிறது இப்படி சுருங்கிவிடுவதா... மனதிற்கும் புத்திக்கும் (mind - brain) உள்ள விஷயம்னு நான் நினைச்சிட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bona fide இருமைத் தத்துவம் எதுன்னு எனக்குத் தெரியாது கணேஷ். குத்து மதிப்பா எனக்குப் புரிஞ்ச மாதிரி ஒரு பெயர், அவ்வளவு தான். நான் கொடுத்த பெயர் தப்பா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’