மாறிக்கொண்டே இருக்கும் உலகம்

உன் குழந்தை(கள்) வளர்ந்து வாழப்போகும் உலகம் நீ வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்திலிருந்து மாறுபட்டது. அந்த உலகத்தின் போக்கு, நியாயங்கள் அனைத்தையும் உன்னால் புரிந்துகொள்ள முடியாது.

உன்னுடைய உலகத்தின் புதியதொரு நகலை உன் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க முயன்றால் நீ தோற்றுப் போவாய்; உன் குழந்தைகள் உன்னை ஒதுக்கி தாங்களாகவே தங்கள் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை வரும். உன் குழந்தைகள் தங்கள் உலகத்திற்குள் சென்று வெற்றிபெற உதவும் பாலமாக இருப்பதா, இல்லை அவர்களைத் தடுத்து நிறுத்தும் சுவராக இருப்பதா என்பது உன் முடிவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்