செவ்வாய், 19 மே, 2009

அம்மா

மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்.
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கு பயந்தது நினைவிருக்கிறது.
கரப்பான்பூச்சிக்கு பயந்து தெருவையே கூட்டியது எட்டு வயதில்.
பதிமூன்று வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாள் காய்ச்சல்.
இருபத்து மூன்றாம் வயதில் ஒருமுறை, நாய்க்கு பயந்து
இரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கிறேன்.

"நாய் என்ன செய்யும் நீ பாட்டுக்கு நட" சொல்கிறேன் மகளிடம்.
நேற்றிரவு தான் வீட்டில் ஒரு எலியைக் கொன்றேன்.
எல்லாம் அமுதா பிறந்ததற்கப்புறம் தான்.