சனி, 21 பிப்ரவரி, 2009

படுக்கையில் அமர்ந்திருக்கிறேன்

ராத்திரிப் பூச்சிகளின் விச் விச்
மின்விசிறியின் கரங் கரங்
சோடியம் வேப்பரில் நனையும் வீதி
இன்னும் அணைக்காத குழல்விளக்கு
மனதில் பொங்கி வழியும் உன் முகம்
உன் கை கோர்த்து நடந்த நினைவுகள்
இந்த இரவும் விடியத்தான் போகிறதோ?