தனித்தமிழில் எனக்கு உடன்பாடில்லை

தனித்தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையின் மிக முக்கியமான செயல்பாடாக நாம் கற்றலைக் கொண்டுள்ளோம். கற்றல் என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பதில் மட்டும் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நண்பருடன் பேசும் போதும், சினிமா பார்க்கும் போதும், நம் கம்பெனியில் இருக்கும் அர்த்தமில்லா நடைமுறைகளையும் விதிமுறைகளையும் எண்ணி வியக்கும் போதும், ட்ராஃபிக்கில் குறுக்கே வருபவனைத் திட்டும் போதும், இன்னும் பலப்பல அன்றாடக் காரியங்களின் போதும் நாம் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய கற்றலானது நம்முடைய மேல்மட்ட மனது, அறிவுக்கு வராமல்/தெரியாமல் போகலாம்; ஆனால் நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம்.

கற்றலுக்கு நாம் பயன்படுத்துவது பல மொழிகள். முக்கியமாக தமிழும் ஆங்கிலமும். கற்ற மொழியிலே சிந்திப்பதும், நம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் பல நேரங்களி்ல் எளிதாக இருக்கிறது. வேலை/உணவுக்காக ஆங்கிலம் படிப்போம், ஆங்கிலத்தில் சிந்திப்போம், ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்வோம் என்பது எனக்கு ரொம்ப அந்நியமாகவே படுகிறது.

பல ஆங்கில வார்த்தைகள் இப்போது அப்படியே தமிழாகி விட்டன. "பஸ்ல போறதை விட ஆட்டோல போறது ஈஸி" என்ற சொற்றொடரே மனதால் எளிதில் அடையாளம் காணப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது (ஒப்பிடுக: பேருந்தில போறதை விட ஆட்டோல போறது சுலபம் [மன்னிக்கவும்: auto-க்கு தமிழ்ல என்ன?]).

கருத்துகள்

 1. (ஒப்பிடுக: பேருந்தில போறதை விட ஆட்டோல போறது சுலபம் [மன்னிக்கவும்: auto-க்கு தமிழ்ல என்ன?]). முச்சக்கர தானியங்கி

  இது இன்றைய நிலைமை. வருங்காலத்தில் இந்த நிலைமை மாறலாம்.
  There are more english speaking Indians than Americans. வருத்தப்படத்தக்க உண்மை. American Monopoly_க்கு இதுவும் ஒரு காரணம் என்பது என் கருத்து. Einstein இந்தியனா இல்லாம போனது நம்ம துரதிர்ஷ்டம்..
  Auto, bus இதையெல்லாம் கண்டுபிடிச்சது இங்கிலீஷ்காரன்னு வச்சுக்குவோம் அவனோட மொழிக்கு நாம முன்னுரிமை கொடுக்கலாம்.
  மஞ்சளையும், எண்ணியலையும் கண்டுபிடிச்சது இந்தியனாச்சே அப்ப இந்திய மொழிக்கு முன்னுரிமை தரணுமா இல்லையா.
  நாலு நாள் முன்னாடி ibn செய்திகளில் தெரிந்து கொண்ட தகவல் oxford dictionary_ல இந்திய வார்த்தைகள் சேர்க்கப்படுகின்றன.
  உதாரணம். catamaran (tamil), loot (hindi)

  தமிழ் என்றைக்குமே தனி தான். நீங்கள் சொல்வது பேச்சு வழக்கு. இதை அரசியலில் நடைமுறைப் படுத்தலாகாது படுத்தவும் கூடாது.

  பதிலளிநீக்கு
 2. "குசேலன்" புனைப்பெயரா? "பொருள்" பொதிந்த பெயர்.

  பதிலளிநீக்கு
 3. // முச்சக்கர தானியங்கி //
  தமிழாக்கத்துக்கு நன்றி!!


  //நீங்கள் சொல்வது பேச்சு வழக்கு. இதை அரசியலில் நடைமுறைப் படுத்தலாகாது படுத்தவும் கூடாது.//
  நீங்கள் சொல்வது ஒருவகையில் நியாயமென்றே படுகிறது. ஆனாலும் சின்ன நெருடல். மக்கள் பேசும் மொழியையே ஏன் அரசியலிலும் பயன்படுத்தலாகாது?

  //"குசேலன்" புனைப்பெயரா? "பொருள்" பொதிந்த பெயர்.//
  காரணமே இல்லாமல் எனக்கு கிருஷ்ணரைப் பிடித்திருக்கிறது. அதனால் சும்மா தேர்ந்தெடுத்த பெயர்.

  வருகைக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. unmaileye ungaludaya Karuthukkal enakku romba puduchirukkunga...eanna ethartha valkaiya puriya vachurukeenga... Romba thanksnga....

  Kathirvel
  Kinathukadavu...
  98949 26476
  enkku ungaloda etharthangala padikkanum. can u giv a call me...if possible...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்