இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்தா

படம்
17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது.  பாலா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான். நந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.

சர்கார்

பொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன். படம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார். இராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை. இந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப...

இப்போது நான் சுக்குத் தண்ணி ரசிகன்

படம்
காஃபி குடிக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. காஃபியின் மணமும் சுவையும் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இப்போது சில மாதங்களாக எனக்கு ஜீரணக் கோளாறு இருப்பதால் காஃபியை நிறுத்திப் பார் என்று ஒரு நண்பர் அறிவுரை கூறினார். ஒரு வாரம் காஃபியே குடிக்கவில்லை. ஜீரணக் கோளாறு முற்றிலும் சரியாகவில்லை, ஆனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருகிறது. முன்பு காலை 7:30 மணிக்கு முன் எழுவதே கடினம்; ஆனால் இப்போது சுலபமாக 6:30 மணிக்கு விழித்து விடுகிறேன். இருந்தாலும் காஃபி குடிப்பதை நிறுத்துவது கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு தான் யோசித்து நம் ஊரில் கிடைக்கும் சுக்கு மல்லி காஃபியைக் குடித்தால் என்ன என்று யோசித்தேன். பெயர் தான் சுக்கு மல்லி “காஃபி”யே தவிர அதில் காஃபிப் பொடி சேர்ப்பதே கிடையாது. (அதனால் இப்போது அதை “சுக்குத் தண்ணி” என்று நான் அழைக்கிறேன்.) வீட்டிலேயே சுக்கு, மிளகு, மல்லி எல்லாம் வறுத்து அரைத்து ஒரு பாட்டிலில் அடைத்து அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டேன். மாலை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் போடுவதற்காக வைத்திருக்கும் வெந்நீரில் சுக்குத் தண்ணி தயார் செய்து குடிக்கிறேன். இரண்டு நாளிலேயே அதன் சுவை...