இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்மதன் அம்பு

காதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான்.  காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.  புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம்.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-) படத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்தது.  உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது.  அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.  ஒரு உதாரணம்.  ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்துப் போகிறாள்.  அதெப்படி சாத்தியம் என்று

கடலோடி

"மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..." என்று வடிவேலு சொன்னதும் பளார் என்று ஒரு அறை விட்டு "ஆடு எப்படிடா பேசும்?" என்று கேட்பார் கவுண்டமணி.  இந்தக் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது எஸ் ராமகிருஷ்ணனின் கோடுகள் இல்லாத வரைபடம் என்ற புத்தகத்தில் "கடலோடி" என்ற வார்த்தையைப் படித்ததும்.  (கடல்ல எப்படிடா ஓடுவ?) நாடு நாடாக ஓடுபவன் நாடோடி, கடல் கடலாக ஓடுபவன் கடலோடி.  கடலோடி என்ற வார்த்தையை எண்ணிப் பார்க்கையில் மனதில் உண்டாகும் அதிர்வுகள் என்னை ஆச்சர்யப்பட வைக்கின்றன.  நாடோடியாக அலைந்து திரிய வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த எனக்குள், கடலோடியாக அலையும் கனவு எழத் தொடங்கி விட்டது.  மனிதனே எல்லா விலங்குகளையும் விட தொலைதூர ஓட்டத்தில் சிறந்தவன் என்று என் நண்பர் ஒருமுறை சொன்னார்.  மான்களை வேட்டையாட அவற்றை விடாமல் துரத்துவதே போதுமாம்.  ஓடிக் களைத்த மானை மிக எளிதாகக் கொல்லலாம்.  ஆனால் நம்பிக்கையும் பொறுமையும் அவசியம் -- விடாமல் மானின் பின்னே சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அது போலத்தான் கடல் கடப்பதும்.  எத்தனை பெரிய நீர்நிலை கடல்!  அத

நினைவுகள்

நல்ல அலைகள் வருகையில் சிரித்தும் கெட்ட அலைகள் வருகையில் முறைத்தும் சில மோசமான அலைகள் வருகையில் ஓடிப்போய் வெளியே நின்றுமாய் கடலில் கால் நனைக்கிறேன் நான்.