விசும்பு
ஐம்பூதங்களில் ஒன்றாக ஆகாயத்தையும் நினைத்து வந்தேன். ஜெயமோகன் மறுபிறப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அளிக்கும் பதிலில் இவ்வாறு சொல்கிறார்: ஐம்பெரும்பூதங்களால் [நிலம்,நீர்,எரி,வளி,விசும்பு] ஆனது இந்த உடல். மரணத்தில் ஒவ்வொன்றும் அந்தந்த பூதத்தில் கலக்கின்றன. உயிர் ஐந்தாவது பூதமாகிய விசும்பில் அல்லது சூனியப்பெருவெளியில் கலந்து விடுகிறது. ஐந்தாவது பூதம் ஆகாயம். வானம் அல்ல... அது விசும்பு -- இந்தப் பிரபஞ்சத்தின் பரந்த வெளி. நாம் கண்ணால் காணும் ஆகாயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு, பல லட்சம் மடங்கு பெரியது!