தேய்பிறை
'சிலநாள் இன்பம் சிலநாள் துன்பம் என்பதாய் மனித வாழ்க்கை ஏனுள்ளது குருவே?' வானத்தை அண்ணாந்து பார்த்தார் குரு. நிலவைப் பார்த்தவாறே சொன்னார். 'முழு நிலவு எத்தனை அழகாய் இருக்கிறது!' 'ஆனால் நேற்றல்லவா பௌர்ணமி?' மனதில் நினைத்தாலும் நான் அதை வெளியில் சொல்லவில்லை. என் முகம் நோக்கி முறுவலித்த குரு சொன்னார் 'ஆம், நேற்றுத்தான் பௌர்ணமி. சொல் இராகவா, பௌர்ணமி இரவு முழுவதும் முழு நிலவு தெரியுமென்றா நினைக்கிறாய்? கொஞ்சம் கொஞ்சமாய் வளந்து வரும் நிலவு ஒரே ஒரு கணத்தில் முழுநிலவாய்க் காட்சியளித்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கவில்லை என்று எப்படித் தெரியும் உனக்கு?' 'அப்படியென்றால் இன்பம் துன்பம் என்பதெல்லாம் வெறும் காட்சி மயக்கங்கள் தானா?' 'ஆமென்று சொன்னால் நம்பி விடுவாயா?' இல்லையென்பது தான் பதில். ஆனால் மௌனமாய் தலை கவிழ்ந்தேன். 'வளர்வதெல்லாம் தேயுமென்றும் தேய்வதென்பதே மீண்டும் வளர்வதற்காகத்தான் என்றும் ஒரு சாரார் நம்புகிறார்கள்.' 'ஆனால் எந்நாளும் மாறாமல் இருக்கும் கதிரவனும் கடலும் மலைகளும் இருக்கும் பிரபஞ்சத்தில் தானே