கற்றது தமிழ்

கற்றது தமிழ் படம் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதவோ அல்லது படத்தைப் பற்றிக் கருத்து சொல்லவோ இப்போது மனமில்லை. அந்தப் படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள், பாடல் வரிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. உங்களுக்குப் பிடித்த காட்சிகள், வரிகளையும் சொல்லுங்களேன்!

வசனங்கள்/காட்சிகள்:
0:05:14 என் கூட படிச்ச முப்பது பேர்ல மூனு பேருக்கு மைனாரிட்டி-னு வேலை கிடைச்சது.
0:26:15 கடைசி குச்சி. வேற பெட்டி தேட முடியாது.
0:26:26 புத்தி இருக்கிறவன்தான் புகைவிட முடியும்
0:28:37 நிஜமாத்தான் சொல்றியா?
0:30:33 புரியலை? / ஆமா சார். / உங்களுக்குப் புரியலைன்னா என்ன சார்? / அப்புறம் ஏன்டா கேட்ட?
0:36:17 நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க
0:38:18 சார் / என்னடே? / பால் சார். / அதுக்கென்னடே? / தேங்க்ஸ் சார். / நோ மென்ஷன் டே
0:45:06 இப்போ வரைக்கும் சாவுதான் என் விசிட்டிங் கார்ட்
0:59:36 அதெல்லாம் கிடைக்கும்... ஒரு டம்ளர் சுடுதண்ணி கிடைக்குமா?
1:15:31 அநேகமா அவருக்குப் போன ஜென்மம்னு ஒன்னு இருந்திருந்தா டூரிஸ்ட் கைடா தான் இருந்திருப்பாரு. என்ன நான் சொல்றது...
1:32:25 நான் உன் ஃபிரண்டு இல்லைன்னு சொல்லு, நான் படிக்கலை.
1:32:45 இந்தா, நீயே படி. லெட்டர்... லவ் லெட்டர்...
1:51:18 இந்த உலகமே என்னை மயிரு மாதிரி ஆக்குச்சு. ஆனா அந்த ஒருதுளி இரத்தம் என்னைக் கடவுளாக்குச்சு.
1:52:21 கதைக்குத்தான் இந்தக் காரணம் லொட்டு லொசுக்கு எல்லாம். நிஜ வாழ்க்கைக்கு காரணமும் கிடையாது, தர்க்கமும் கிடையாது.
2:16:42 லாரி ஆக்ஸிடெண்ட்ல கூட எங்க அம்மா, தாத்தால்லாம் இறந்து போனாங்களே...


பாடல் வரிகள்:
வழிப்போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது.

நதியில் விழுந்த இலைகளுக்கு மரங்கள் அழுவது கிடையாது.

கடவுளாக மாறிவிட்டால் கொலைகள் செய்வது குற்றமில்லை.

கதைபேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.

இந்தப் புல் பூண்டும் பறவையும் நாமும் போதாதா...

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா...

கருத்துகள்

  1. இவனுக்கு ஆங்கிலமே அரைகுறை .. தமிழ்ல தற்குறி .. இவனுக்கு 2 லட்சம் சம்பளமா..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)