சாதிகள் இருந்ததடி பாப்பா

நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் என்னுடைய தமிழ் வாத்தியார் என்னுடைய தாத்தா பெயரைக் கேட்டார். (என் தாத்தா பெயரை அவர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஒரு அரைவேக்காடு என்பதால் இதையெல்லாம் கேட்பது வழக்கம் தான்.) எப்போதும் என் தாத்தா தன் பெயரைச் சொல்வதுபோல் நானும் "மாடசாமி நாடார்" என்றேன். உடனே சுதாரித்துக் கொண்டு "மாடசாமி" என்று மீண்டும் சொன்னேன்.

ஏனென்றால் எனக்கு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்கப் பட்டது, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. என் நண்பர்கள் பலரையும் போல நானும் ஐாதியைப் பற்றிப் பேசுவதில்லை என்று தீர்மானமாக இருந்த காலம் அது. ஆகவேதான், உடனே அவசரப்பட்டு என் தாத்தாவின் பெயரிலிருந்து ஐாதியை நீக்கிச் சொன்னேென்.

இது நடந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து இப்போது ஐாதி விஷயத்தில் என் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என் தாத்தா வாழ்ந்த காலத்தின்படி பார்க்கையில் அவரது முழுப்பெயர் என்பதே அவரது ஐாதியின் பெயரும் சேர்ந்ததுதான். எனக்குத் தெரிந்த வரையில் அவர் தன் பெயரை ஐாதியைச் சேர்க்காமல் சொல்லிக்கொண்டதே இல்லை.

"ஐாதி வேண்டாம்" என்று சொல்வதன் அர்த்தம் "ஐாதியைப் பெரிதாக நினைக்க வேண்டாம்" என்பதாகத்தான் இருக்க முடியுமே தவிர "ஐாதி என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சாதிக்க வேண்டும்" என்றிருக்கச் சாத்தியம் இல்லை. ஐாதி என்ற கருத்துக்கு முன் கண்ணை மூடிக்கொள்வதால் என்ன பயன்? என் பெயரில் நான் என் ஐாதியை இணைத்துக்கொள்ளப் போவதில்லை. வேற்று ஐாதிக்காரர் என்பதால் மற்றவரை நான் வித்தியாசமாக நடத்தப்போவதில்லை. ஒரு பெண்ணைப் பிடித்திருக்கும் பட்சத்தில் அவள் என் ஐாதியைச் சேர்ந்தவள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக திருமணத்தை மறுப்பதற்கில்லை. இவையே ஐாதி விஷயத்தில் செய்யத் தகுந்தவை. நிலைத்துவிட்ட பெயர்களிலிருக்கும் ஐாதிப்பெயர்களை நீக்குவதென்பது தேவையில்லாதது என்பது இப்போதைய என் கருத்து.

(இதுவே மற்ற பலரின் கருத்தாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாட்டெழுதிய பாரதியின் படைப்புகளில் இல்லாத ஐாதிப்பெயர்களா?)

கருத்துகள்

  1. இன்றும் ஜாதி பாத்து தான் அரசாங்கம் வேலை கொடுக்கிறது... என்ன செய்ய??

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்